Jump to content

User:Nsathiya28

From Wikipedia, the free encyclopedia
சதாசிவ பிரம்மேந்திரர்
Born17ம் நூற்றாண்டு
திருவிசைநல்லூர், கும்பகோணம்[1]

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரா

கடந்த 17 ஆம் நூற்றாண்டில் அவதரித்த நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சிறுவயது முதலே அறிவுக் கொழுந்தாக விளங்கியவர்..

வாழ்க்கை மற்றும் அற்புதங்கள்

[edit]

> சிறு வயதில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராளின் இயற்பெயர் சிவராமன் லௌகீக வாழ்வை வெறுத்து கும்பகோணம் மடத்தில் தம்முடைய குரு பரம சிவேந்திர சரஸ்வதியை சந்திக்கிறார் ...குருவின் திருவடியில் சரண் அடைந்த சிவராமனுக்கு ஞான குரு மந்திர உபதேசம் செய்தார் ...சிவராமனின் மன உறுதியையும் ,பக்குவ நிலை அடைந்து விட்டதை குரு அறிந்து “”சதாசிவன்”” என்ற புதிய திருநாமம் வழங்கினார் .மேலும் திருமூலரின் பிரம்ம சூத்திரம் விளக்கும் தத்துவமசி என்ற நிலையை யோக நிஷ்டையில் அனுபவித்தார்

> மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் திருமூலர் கடைபிடித்த கடினமான சித்த யோக மார்க்கத்தின் வழிமுறைகள் மற்றும் யோக நிஷ்டையின் உயர்ந்த நிலைகளை எல்லாம் சுய அனுபவ ரீதியாக துல்லியமாக ஆராய்ந்து அறிந்தவர் ஆவார்..

> வேதாந்த ,சித்தாந்தங்களுக்கெல்லாம் மணிமகுடமாக திகழும் மூன்று மகா வாக்கியங்கள் 1.தத்துவ மசி ..2.அகம் பிரம்மாஸ்மி 3.சர்வம் பிரம்ம மயம் -இந்த யோக நிஷ்டையின் உயர்ந்த மூன்று நிலைகளில் சதாசிவ பிரம்மேந்திராள் தேர்ந்தெடுத்த வழிமுறை என்பது சர்வம் பிரம்ம மயம் என்ற வழிமுறை ஆகும் ...

> கொடுமுடியில் ஆற்றில் மண் எடுக்க குழி வெட்டும்போது மண்வெட்டி ஒரு கடினமான பொருள் மீது பட்டு திடீரென இரத்தம் பீறிட்டு வர தோண்டி பார்க்கும் போது உள்ளே யோக நிஷ்டையில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் இருந்திருக்கிறார் ...

> அதே போல ...வைக்கோல் போர்வைக்குள் பல காலம் யோக நிஷ்டையில் இருந்து இருக்கிறார் ..

> ஒருமுறை குறுநில நவாப் ஒருவன் தன்னுடைய நகரத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் உடம்பில் எந்த ஆடையும் இன்றி நிர்வாண கோலத்தில் யாரையும் இலட்சியம் செய்யாமல் உலவி வரும் காட்சியை கண்டான்.. இதன் காரணத்தை அறிய வேண்டி பக்கத்தில் நிற்கும் படி உத்தரவும் இட்டான் ..சர்வ காலமும் பிரம்ம நிஷ்டையில் இருந்த சதாசிவ பிரம்மேந்திராளின் செவிகளில் அவன் கட்டளை விழவில்லை ..இதனால் கோபமுற்ற நவாப் அவமானம் அடைந்ததாக கருதி தன் வாளை உருவி ஒரு கையை வெட்டி வீ ழ்த்த ..கை துண்டாக தரையில் விழுந்தது ...ஆனால் இதை எல்லாம் சிறிதும் அலட்சியம் செய்யாமல் பிரம்மேந்திராள் வழக்கம் போல் நடந்து சென்று கொண்டிருந்தார்..பின்பு இவர் பெரிய மகான் என்பதை உணர்ந்த நவாப் வெட்டுண்ட கையை எடுத்து கொண்டு அவர் பின் ஓடிச்சென்று மன்னிப்பு கோர கையை வாங்கி தனது தொள்பட்டையில் வைக்க கை ஒட்டி கொண்டதாம் ...

> இவர் மூன்று இடங்களில் ஜீவசமாதி கொண்டுள்ளார் 1.ஸ்தூல சரீரத்தை கரூர்க்கு 12 கிலோ மிட்டர் தொலைவில் நெரூர் எனும் இடத்திலும் ..2.சூட்சும சரீரத்தை மானாமதுரையிலும், 3.காரண சரீரத்தை தற்போது பாகிஸ்தான் பகுதியான கராச்சியில் என மூன்று இடங்களில் சமாதி கொண்டுள்ளார் ..

இதையும் பார்க்க

[edit]

வெளி இணைப்புகள்

[edit]

மேற்கோள்கள்

[edit]
  1. ^ "Sadasiva Brahmendra (18th Century)". Retrieved 2 December 2010.

ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர்

[edit]